TN TET (SPECIAL TET ) Paper 1 and Paper 2 8th Science Chapter 2 Force and Pressure (04)
TN TET (SPECIAL TET ) Paper 1 and Paper 2 8th Science Chapter 2 Force and Pressure (04)
8-ஆம் வகுப்பு அறிவியல்: அலகு 2 - விசையும் அழுத்தமும் ( Force and Pressure)
Master the fundamental concepts of physics with our all-inclusive guide to the 8th Standard Science Unit 2 on Force and Pressure. This blog post breaks down the invisible forces shaping our world—from the crushing weight of Atmospheric Pressure and the hydraulic power of Pascal’s Law to the distinct properties of liquids like Surface Tension and Viscosity. We also delve into the dual nature of Friction, exploring its types and why it is often called a "necessary evil." Whether you are a student aiming for top grades or a TNTET aspirant seeking precise preparation, our line-by-line study notes, glossary definitions, and 50 curated MCQs will ensure you have a complete grasp of this essential chapter.
8-ஆம் வகுப்பு அறிவியல்: அலகு 2 - விசையும் அழுத்தமும்
நினைவில் கொள்க, சொல்லடைவு மற்றும் பாட மதிப்பீட்டு வினாக்கள்.
Force and Pressure (விசையும் அழுத்தமும்) - Online Test
DOOZY STUDY
Science - Force and Pressure Quiz
|
Science Quiz
|
|---|
8-ஆம் வகுப்பு அறிவியல்: அலகு 2 - விசையும் அழுத்தமும் (பகுதி 4)
நினைவில் கொள்க, சொல்லடைவு மற்றும் பாட மதிப்பீட்டு வினாக்கள்.
பாடச் சுருக்கம் மற்றும் மதிப்பீடு
நினைவில் கொள்க
- ஒரு பொருளின் மீது செயல்படுத்தப்படும் விசை அப்பொருளின் ஓய்வு நிலையையோ அல்லது சீரான இயக்க நிலையையோ அல்லது பொருளின் வடிவத்தையோ மாற்றுகிறது.
- விசையின் SI அலகு நியூட்டன் ஆகும்.
- ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் தொடர்பு கொள்ளும்போது மட்டுமே விசை செயல்படுகிறது.
- விசையின் விளைவினை அழுத்தம் எனப்படும் இயற்பியல் அளவைக் கொண்டு கணக்கிடலாம். திரவங்கள், வாயுக்கள் மற்றும் காற்று ஆகிய யாவும் அழுத்தத்தைச் செலுத்துகின்றன.
- பூமியின் மீதுள்ள அனைத்துப் பொருள்களும், வளிமண்டலத்தின் காரணமாக ஒரு உந்துவிசையை உணர்கின்றன.
- வளிமண்டல அழுத்தத்தை அளவிட உதவும் கருவி பாதரசமானி ஆகும்.
- ஒரு பொருளின் இயக்கத்தை எதிர்க்கும் விசைக்கு உராய்வு என்று பெயர். ஒழுங்கற்ற பரப்புடைய பொருள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்வதே உராய்விற்கான காரணமாகும்.
- உராய்வானது தொடும் பொருள்களின் பரப்புக்களையும், அவற்றின் எடையையும் சார்ந்தது.
- உராய்வு இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது. அவை:
- நிலை உராய்வு
- இயக்க உராய்வு (இது மேலும் நழுவு உராய்வு மற்றும் உருளும் உராய்வு என வகைப்படுத்தப்படுகிறது).
- திரவ மூலக்கூறுகள் சிறுமப் புறப்பரப்பை அடைவதற்காக தங்களின் பரப்பை சுருக்கிக் கொள்ளும் தன்மையே பரப்பு இழுவிசை எனப்படுகிறது.
- திரவங்கள் இயக்கத்தில் இருக்கும்போது அவற்றினுள் உள்ள திரவ அடுக்குகளுக்கு இடையே ஒரு உராய்வுவிசை உருவாகிறது. இந்த உராய்வு விசை திரவ அடுக்குகளின் ஒப்புமை இயக்கத்தை எதிர்க்கும் வகையில் அமைகிறது.
- இவ்விசை பாகியல் விசை என்றும், இந்நிகழ்வு பாகுநிலை என்றும் அழைக்கப்படுகிறது.
- பாகுநிலையின் அலகுகள்:
- CGS அலகு முறையில்: பாய்ஸ் (Poise)
- SI அலகு முறையில்: kg m-1 s-1 அல்லது N s m-2
சொல்லடைவு
- விசை: பொருள்களைத் தள்ளும் அல்லது இழுக்கும் செயல்.
- உந்துவிசை: கொடுக்கப்பட்ட பரப்பின் மீது செயல்படும் செங்குத்து விசை.
- அழுத்தம்: ஓரலகு பரப்பின் மீது செயல்படும் விசை.
- மிதப்பு விசை: மிதக்கும் பொருளின்மீது திரவம் செயல்படுத்தும் மேல்நோக்கு விசை.
- பரப்பு இழுவிசை: திரவங்களின் புறப்பரப்பின் ஓரலகு நீளத்திற்கு செங்குத்தாக செயல்படும் விசை.
- உராய்வு: சார்பியக்கத்தில் உள்ள பரப்புகளின் ஒழுங்கற்ற தன்மையால் உருவாக்கப்படும் விசை.
மதிப்பீடு - சரியான விடையைத் தேர்ந்தெடு
-
1. ஒரு பொருள் இயங்கும் திசைக்கு எதிரான திசையில் விசையைச் செலுத்தினால் அப்பொருளின் இயக்கமானது __________.
- அ. நின்று விடும்
- ஆ. அதிக வேகத்தில் இயங்கும்
- இ. குறைந்த வேகத்தில் இயங்கும்
- ஈ. வேறு திசையில் இயங்கும்
-
2. திரவத்தினால் பெறப்படும் அழுத்தம் எதனால் அதிகரிக்கிறது?
- அ. திரவத்தின் அடர்த்தி
- ஆ. திரவத்தம்ப உயரம்
- இ. அ மற்றும் ஆ
- ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
© Doozy Study - Science Notes
Comments